search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்ட பயிற்சி"

    • அவிநாசி கருப்புசாமி, அந்தியூா் குணசேகரன், அவல்பூந்துறை செல்வம், சண்முகம் ஆகியோா் பயிற்சி வழங்கினா்.
    • பயிற்சி வகுப்பை அவிநாசி பேருராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தொடங்கி வைத்தாா்

    அவிநாசி:

    அவிநாசியில் பேரூராட்சி செயல் அலுவலா்களுக்கு தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி நடைபெற்றது.பயிற்சி வகுப்பை அவிநாசி பேருராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தொடங்கி வைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் இந்துமதி தலைமை வகித்தாா்.இதில் அவிநாசி கருப்புசாமி, அந்தியூா் குணசேகரன், அவல்பூந்துறை செல்வம், சண்முகம் ஆகியோா் பயிற்சி வழங்கினா். தூய்மைப்பணியாளா்களின் விவரங்களை சேகரிப்பது, முக்கிய தூய்மைப் பணியாளா்களை கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.அவிநாசி, குன்னத்தூா் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், பேரூராட்சிகளின் பரப்புரையாளா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் ஆகியோா் பயிற்சி பெற்றனா்.

    • இடைநிலை ஆசிரிய–ர்களுக்கான “எண்ணும் எழுத்தும்” திட்ட பயிற்சி நடைபெற்றது.
    • இப்பயிற்சியில் ஆர்வத்துடன் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்று பள்ளி மாணவர்கள் விரும்பி கல்வி கற்க ஏதுவான துணை உபகரண பொருட்களை உருவாக்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம், பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரிய–ர்களுக்கான "எண்ணும் எழுத்தும்" திட்ட பயிற்சி நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் பங்கேற்று பயிற்சியை துவங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ் பார்வையிட்டார். பள்ளி கோடை விடுமுறை நாட்களிலும் 5 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் ஆர்வத்துடன் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்று பள்ளி மாணவர்கள் விரும்பி கல்வி கற்க ஏதுவான துணை உபகரண பொருட்களை உருவாக்கினர்.

    மாணவர்களுக்குகல்வி மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் பாடல், கதை, படைப்பாற்றல், கைவண்ணம், பொம்ம–லாட்டம் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் எவ்வாறு எளிமையாக கல்வியை மாணவர்கள் மத்தியில் எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இப்பயிற்சிக்கு கீழையூர் வட்டார கல்வி அலுவலர்கள் லீனஸ், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பயிற்சிக்கு கருத்தா ளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் மாட்டின் பாக்யராஜ், மகிமை ரூபஸ் ஆகியோர் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கினர். இதில் பள்ளி இடைநிலை ஆசிரியர்களான ராபர்ட் கென்னடி, மாட்டின் சகாயராஜ், அன்பழகன், கலைச் செல்வம், செந்தில் வேல், தமிழ் ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×